‘சரவணன் மீனாட்சி’ சீசன் 4 சீரியலில் என்ட்ரியாகும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி – ப்ரோமோ ரிலீஸ்!

0
'சரவணன் மீனாட்சி' சீசன் 4 சீரியலில் என்ட்ரியாகும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி - ப்ரோமோ ரிலீஸ்!
'சரவணன் மீனாட்சி' சீசன் 4 சீரியலில் என்ட்ரியாகும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி - ப்ரோமோ ரிலீஸ்!
‘சரவணன் மீனாட்சி’ சீசன் 4 சீரியலில் என்ட்ரியாகும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி – ப்ரோமோ ரிலீஸ்!

பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஆலியா தற்போது சரவணன் மீனாட்சி சீசன் 4 சீரியலில் எண்ட்ரியாவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சரவணன் மீனாட்சி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடர் பெரிய அளவில் ஹிட்டடித்தது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சரவணன் மீனாட்சி சீரியல் அளவிற்கு எந்த சீரியலும் ஹிட்டாகவில்லை. ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2, சீசன் 3 ஒளிபரப்பப்பட்டது. இந்த மூன்று சீசன் சீரியலும் நினைத்ததை விட அதிகமாகவே ஹிட்டானது.

Exams Daily Mobile App Download

தற்போது விஜய் தொலைக்காட்சியில் கூடிய விரைவில் சரவணன் மீனாட்சி 4 சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த சீசனில் சரவணன் கதாபாத்திரத்தில் சஞ்சீவும், மீனாட்சி கதாபாத்திரத்தில் ஆலியாவும் நடிக்க இருக்கிறார்கள். ஆலியா பிரசவத்தின் காரணமாக தான் ராஜா ராணி சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து விலகினார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு சீரியல் எதுவும் வேண்டாம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம் என ஆலியா நினைத்திருந்தார். ஆனால், ரசிகர்கள் விரைவில் சீரியலில் எண்ட்ரியாகும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – ‘இவர்கள்’ பொருட்களை வாங்க முடியாது!

பின்னர், கூடிய விரைவில் வேறொரு சீரியல் மூலமாக உங்களை சந்திக்கிறேன் என ஆலியா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்தது போலவே சரவணன் மீனாட்சி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், ஒரே சீரியலில் ஆலியாவும் சஞ்சீவும் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பெருத்த ஆர்வத்தில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here