பாட்டு பாடி, கியூட்டாக நடனமாடிய ஆலியா மானசா மகள் ஐலா – வைரலாகும் வீடியோ!

0
பாட்டு பாடி, கியூட்டாக நடனமாடிய ஆலியா மானசா மகள் ஐலா - வைரலாகும் வீடியோ!
பாட்டு பாடி, கியூட்டாக நடனமாடிய ஆலியா மானசா மகள் ஐலா - வைரலாகும் வீடியோ!

பாட்டு பாடி, கியூட்டாக நடனமாடிய ஆலியா மானசா மகள் ஐலா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் அறிமுகமாகிய சின்னத்திரை ஜோடிகள் ஆன ஆலியா மற்றும் சஞ்சீவ் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக பிரபலமாகி வருகின்றனர். இவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு என ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஐலா பாப்பா அம்மா ஆலியாவுக்கு கொடுத்த பரிசு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா, சஞ்சீவ் :

விஜய் டிவியில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் கதாநாயகி ஆலியா ஜோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பெற்ற சூப்பர் ஜோடியாக இணையத்தில் பிரபலமாகி வருகிறார்கள். சின்னத்திரைக்கு முதன் முதலாக விஜய் டிவியில் அறிமுகமாகிய ஆலியா அவரது பொன் சிரிப்பினாலும் , எதார்த்த நடிப்பாலும் சின்னத்திரையில் டாப் நடிகையாக பிரபலமானார்.

தங்கையின் வாழ்க்கைக்காக வாணி எடுக்கப்போகும் அதிரடி முடிவு – ‘சிப்பிக்குள் முத்து’ ப்ரோமோ ரிலீஸ்!

சீரியலில் கணவன் மனைவியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா நிஜ வாழ்க்கையிலும் ரியல் தம்பதிகளாக ஆனார்கள். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை 2019ல் பிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு ஐலா பாப்பா பிறப்புக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து ராஜா ராணி 2 வில் நடித்து வந்த ஆலியா மேலும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி ஆண் குழந்தைக்கு தாயானார். இவ்வாறு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் சீரியலை விட்டும் விலகினார்.

ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ் ஆக இருப்பவர்கள். அவ்விதமாக அவர்களது யூட்யூப் சேனலில் ஐலா பாப்பாவின் பிறந்தநாள் விழா, அர்ஷ் பிறப்பதற்கு முன்பு நடைபெற்ற வளைகாப்பு என தினசரி வாழ்க்கையில் நடக்கும் நல்ல நினைவுகள் அனைத்தையும் ஷேர் செய்து லைக்குகளையும், பின் தொடர்ப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஆலியாவின் முதல் குழந்தை ஐலா பாப்பா தனது அம்மா படுவது போலவே பாடி, க்யூட்டாக நடனமும் ஆடுகிறார் ஐலா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!