ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா மானசா – கடுப்பான சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
தற்போது ரம்ஜான் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஆலியா, சஞ்சீவ் என குடும்பத்துடன் பர்சேஸ் செய்ய சென்றுள்ளனர். ஆலியாவிடம் ஐலா எங்கே எனக் கேட்டபோது அவரை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டேன் என நக்கலாக கூறியதால் விளையாட்டுத்தனமாக ஆலியாவை சஞ்சீவ் அடிக்கும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா & சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணமும் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமாகி சில நாட்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு தற்போது ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தை பிறந்து சில நாட்களிலேயே ஆலியா சீரியலில் நடிக்க மீண்டும் இணைந்து கொண்டார். இந்த சீரியலுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன்2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.
Exams Daily Mobile App Download
ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான பல வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களும் அந்த வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
தற்போது ரம்ஜான் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஆலியா, சஞ்சீவ் என அனைவரும் குடும்பத்துடன் துணிமணிகள் எடுக்க சென்றுள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பர்சேஸ் செய்த பிறகு வீடு திரும்பும்போது ஆலியாவிடம் சஞ்சீவ் ஐலா பாப்பா எங்கே என கேட்கிறார். உடனே ஆலியா ஐலா பாப்பாவை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டேன். என்னால் ஒரு குழந்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும் என நக்கலாக கூறுகிறார். என்ன தான் விளையாட்டாக கூறினாலும் சஞ்சீவிற்கு கோபம் வருகிறது. உடனே விளையாட்டாக ஆலியாவை அறைவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.