2வது குழந்தை வளைகாப்பில் ஆலியா மானஸாவின் புதிய கெட்டப் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
2வது குழந்தை வளைகாப்பில் ஆலியா மானஸாவின் புதிய கெட்டப் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
2வது குழந்தை வளைகாப்பில் ஆலியா மானஸாவின் புதிய கெட்டப் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
2வது குழந்தை வளைகாப்பில் ஆலியா மானஸாவின் புதிய கெட்டப் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்வின் போது வித்தியாசமான உடை மற்றும் அலங்காரத்துடன் தோன்றி இருந்த நடிகை ஆலியா மானஸாவின் மேக்கப் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரையில் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கும் முன்னணி சீரியல் நடிகை ஆலியா மானஸா. விஜய் டிவியில் வெளியான ‘ராஜா ராணி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து மக்களின் ஆதரவை சம்பாதித்த நடிகை ஆலியா மானஸா அறிமுகமானது வெள்ளித்திரையில் தான். சினிமா உலகம் இவருக்கு வரவேற்புகளை கொடுக்க தவறிய நிலையில் எதேச்சயாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்த ஆலியா மானஸா தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் உயரங்களை அடைந்திருக்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரினாவை அழ வைத்த ரசிகர்கள் – என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

திரையுலகை பொறுத்தவரை திருமணம் ஆன பெண்கள் சினிமா அல்லது சீரியலில் ஒரு ஹீரோயினாக நிலைத்திருப்பது கடினமான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் சின்னத்திரையில் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் நடிகர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றுடுத்த பின்னரும் ஆலியா மானஸாவின் மார்க்கெட் குறையவில்லை என்று தான் சொல்ல முடியும். ஏனென்றால் குழந்தை பிறப்பிற்கு பின்பாக கூட நடிகை ஆலியா மானஸா ‘ராஜா ராணி 2’ என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார். ஆனால் 2வது முறையாக கர்ப்பமான இவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

இதனை தொடர்ந்து ஆலியா மானஸாவுக்கு சமீபத்தில் அர்ஷ் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தை பிறப்பிற்கு முன்பாக ஆலியா மானஸாவுக்கு, அவரது கணவரும் முன்னணி சீரியல் நடிகருமான சஞ்சீவ் மிக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்வை நடத்தி இருந்தார். இந்த நிகழ்வில் ஆலியா மானஸா ‘பாகுபலி’ தேவசேனா போல வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி இருந்தார். அந்த தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்படி இருக்க ஆலியா மானஸாவின் புதிய தோற்றத்திற்காக அவர் செய்து கொண்ட மேக்கப் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here