பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை – அறிமுகமாகும் ஆலியா!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை - அறிமுகமாகும் ஆலியா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை - அறிமுகமாகும் ஆலியா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை – அறிமுகமாகும் ஆலியா!

முல்லைக்கு மீண்டும் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்வார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வரைக்கும் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை செய்து வந்தனர். இந்த சிகிச்சைக்கு மட்டுமே குடும்பத்தினர்கள் 5 லட்சம் செலவு செய்து விட்டனர். எப்படியாவது முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியடைய வேண்டும் என குடும்பத்தினர்கள் வேண்டி கொண்டிருந்தனர். ஆனால், முல்லைக்கு இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டது.

Exams Daily Mobile App Download

தன்னால் ஒரு குழந்தையை கூட பெற்றுக் கொடுக்க முடியாதா என முல்லை மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே குடும்பத்தினர்கள், தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானை நிறுத்தி தான் 5 லட்சத்தை ரெடி செய்தனர். குடும்பத்தினர்களுக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்து விட்டோமே என முல்லை வருந்தி கொண்டிருக்கிறார். முல்லையை தேற்ற குடும்பத்தினர்கள் அனைவரும் மிகவும் முயற்சி செய்கின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றுள்ளனர்.

புதிதாக கார் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா படவாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த ஆலியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலியாவிற்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை கவனிப்பதற்காக ராஜா ராணி தொடரில் இணைய போவதில்லை என கூறியிருந்தார். ஆனால், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக அறிமுகமாக இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here