தனது இரண்டாவது மகன் அர்ஷ் தூங்குவதை ரசிக்கும் ஆலியா – வைரலாகும் வீடியோ!

0
தனது இரண்டாவது மகன் அர்ஷ் தூங்குவதை ரசிக்கும் ஆலியா - வைரலாகும் வீடியோ!
தனது இரண்டாவது மகன் அர்ஷ் தூங்குவதை ரசிக்கும் ஆலியா - வைரலாகும் வீடியோ!
தனது இரண்டாவது மகன் அர்ஷ் தூங்குவதை ரசிக்கும் ஆலியா – வைரலாகும் வீடியோ!

ஆலியா தற்போது தான் ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையை வளர்ப்பதற்காகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது தனது மகனுடன் இருக்கும் படியான ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆலியா & சஞ்சீவ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா. இவர் தன்னுடன் அதே சீரியலில் கதாநாயனாக நடித்து வந்த சஞ்சீவ என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த நிலையில் கூட சீரியலில் நடித்து வந்தார் . ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் இணைந்து கொண்டார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி LPG கேஸ் சிலிண்டர் இலவசம் – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் போலீஸ் அதிகாரியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். நான் மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பின்பு பிரசவத்திற்காக பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக ரியா என்ற புதுமுக நடிகை சந்தியாவாக அறிமுகமானார். தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையப் போவதில்லை எனவும், ரியா தான் இனிமேல் சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் எனவும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கூறினார். தற்போது ஆலியா தனது மகனுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகன் எப்படி தூங்குகிறான் பாருங்கள் என கூறும் படியான ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!