விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி – வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஹாப்பி!

0
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி - வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஹாப்பி!
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி - வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஹாப்பி!
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆலியா & சஞ்சீவ் ஜோடி – வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஹாப்பி!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருக்கும் சஞ்சீவ ஆலியா இணைந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன் 4 சீரியலில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சரவணன் மீனாட்சி சீசன் 4:

சின்னத்திரை சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பல வெற்றி சீரியல்களை கொடுத்த பெருமை விஜய் டிவிக்கு உண்டு. அந்த வகையில் பல சீரியல்கள் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் மூன்று சீசன்கள் தொடங்கப்பட்டு மூன்று சீசன்களும் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் தான் சரவணன் மீனாட்சி. தற்போது இந்த சீரியலின் நான்காவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஜோடி ஏற்கனவே விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அதன் பின் சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஆலியா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார்.

மூர்த்தியை பற்றி தகவல் தெரிந்து வந்த காமாட்சி, மீண்டும் தொடங்கிய சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இரு குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் அவர் கவனம் செலுத்தி வரும் நிலையில் விரைவில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுப்பேன் என ரசிகர்களின் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார். அந்த வகையில் அவர் சரவணன் மீனாட்சி சீரியலில் தனது கணவருடன் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!