சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில் களமிறங்கும் அஜித் பட நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி
சன் டிவி "எதிர்நீச்சல்" சீரியலில் களமிறங்கும் அஜித் பட நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில் களமிறங்கும் அஜித் பட நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை கனிகா. அவர் தற்போது சன் டிவியில் முன்னணி இயக்குனர் இயக்கும் “எதிர்நீச்சல்” என்ற சீரியலில் களமிறங்கி இருக்கிறார்.

நடிகை கனிகா:

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கனிகா. இவர் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய படங்களில் நடித்து இருக்கிறார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட வேடத்தில் நடித்து வெளியான “வரலாறு” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பின்னணிப் பாடல், டப்பிங் துறையிலும் பணியாற்றி இருக்கிறார். இவர் 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் கனிகா மலையாள படங்களில் நடித்து வந்தார். அதன் பின் தமிழில் விக்ரம் உடன் கோப்ரா, விஜய்சேதுபதியுடன் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுத்து மீண்டும் நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மகாவின் முடிவு என்ன?

இப்போது சன் டிவியில் பிப்.7 முதல் தொடங்கி இருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் இவர் களமிறங்கி இருக்கிறார், இந்த சீரியல் கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வருகிறார். கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா ‘ஜனனி’ கேரக்டரில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியல் கதை பெண்களை மையப்படுத்தி இருப்பதால் இதுவும் மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!