‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முட்டி மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யா & மீனா – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முட்டி மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யா & மீனா - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முட்டி மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யா & மீனா - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முட்டி மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யா & மீனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவரும் முட்டி மோதிக்கொள்ளும் படப்பிடிப்பு காட்சியை நடிகை ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் அரங்கேறி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிர் வீட்டை விட்டு போன துக்கம் தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அதாவது, கடந்த வார எபிசோடில் தனத்தின் பிறந்தநாள் விசேஷத்திற்காக வீட்டுக்கு வரும் முல்லை மற்றும் மீனாவின் குடும்பத்தினர் முல்லையின் மருத்துவ செலவுகளை பற்றி பேசி குடும்பத்தில் ஒரு பெரிய பூகம்பத்தை உருவாக்கி விட்டனர். இந்த பிரச்சனை பேசிப் பேசி பெரிதாக, கதிர் ஒரு அதிரடியான முடிவு எடுத்து முல்லையை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு சென்று விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இத்தனை நாட்கள் அண்ணன், தம்பிகள் என்று ஒட்டி உறவாடி வந்த குடும்பத்தில் இப்போது கதிர் இல்லை என்றதும் வீட்டில் உள்ள அனைவரும் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டனர். இந்த கடினமாக சூழலில் கதிர் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கும் மூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி வருகிறது. இப்போது தனம், கண்ணன், ஜீவா மூவரும் மூர்த்தியை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இது போல பல்வேறு பாசப்போராட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சண்டையிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

தமிழக மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அதாவது, தனத்தின் பிறந்த நாளுக்காக மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமைக்கப்போவதாக சொல்லி களேபரம் செய்திருந்தனர். இது குறித்த எபிசோடுகளும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முட்டிமோதிக்கொள்ளும் படப்பிடிப்பு காட்சிகளை நடிகை ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகளில் அதிக கவனம் பெற்று வரும் ஐஸ்வர்யா, மீனா காம்போவை ரசிகர்கள் இந்த கோணத்தில் பார்த்ததுடன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!