முல்லையை சமாதானம் செய்த கதிர், தனத்திடம் பணம் கேட்ட ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லையை சமாதானம் செய்த கதிர், தனத்திடம் பணம் கேட்ட ஐஸ்வர்யா - இன்றைய
முல்லையை சமாதானம் செய்த கதிர், தனத்திடம் பணம் கேட்ட ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லையை சமாதானம் செய்த கதிர், தனத்திடம் பணம் கேட்ட ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வேலை முடிந்து வீட்டிற்கு வர முல்லை அவரிடம் வேலை பற்றி கேட்கிறார்.பதிலுக்கு கதிர் இந்த வேலை எனக்கு பிடித்திருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கண்ணன் வேலைக்கு தனத்திடம் பணம் கேட்க அதை கேட்டு மீனா கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதிர் இன்னும் வரவில்லை என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை எனக்கு உண்மை தெரிந்துவிட்டதை தெரிந்து கொண்டு வராமல் இருப்பதாக நினைக்கிறார். அப்போது கதிர் வருகிறார் கதிரிடம் எதுவும் பேசாமல் இருக்க நான் குளித்துவிட்டு வருகிறேன் என கதிர் சொல்கிறார். அப்போது முல்லை கதிர் கையை பிடிக்க கையில் அடிபட்டு இருக்கிறது. முல்லை அதை பார்த்துவிட்டு என்ன இது என கேட்க இன்னைக்கு பசங்க வேலைக்கு இல்லை அதனால் எல்லாம் நான் பார்த்தேன் என கதிர் மீண்டும் போய் சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் முல்லை இன்னைக்கும் உங்க கடைக்கு வெங்காயம் தான் வந்ததா என கேட்க கதிர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ததாக ஏன் சொன்னீங்க என முல்லை கேட்க, அண்ணன் பெரிய கடை வைத்திருக்கும் போது நாம வேற கடையில் வேலை செய்தால் நன்றாக இருக்குமா அதுவும் அவசரத்திற்கு இந்த வேலை தான் கிடைத்ததாக கதிர் சொல்கிறார். உங்களுக்கு ஹோட்டல் வேலை பற்றி என்ன தெரியும் என முல்லை கேட்க இவ்வளவு நான் தெரியாது ஆனால் இப்போது தெரிந்திருக்கிறது அன்னைக்கு நான் சமைத்தது நன்றாக இருப்பதாக சொன்னாய் என கேட்கிறார்.

இப்படி அடிபட்டு வந்திருக்கீங்க என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என கதிர் சொல்கிறார். மறுபக்கம் மீனா ஜீவாவிடம் அப்பா பேசினார்களா என கேட்க ஆமாம் கடைக்கு வந்திருந்தார் என ஜீவா சொல்கிறார். அவருடைய கடைக்கு வர சொன்னார் இங்கே ஆள் இல்லாமல் எப்படி போவது என கேட்க, மீனா கதிர் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். கதிர் எந்த ஹோட்டலில் வேலை செய்கிறார் உங்களுக்கு தெரியுமா என கேட்க தெரியும் நான் தான் பார்த்தேன் என ஜீவா சொல்கிறார்.

ஈஸ்வரி பாட்டி கூப்பிட்டும் வராத பாக்கியா, கோபியை காரணம் சொல்லும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் மீனா சம்பளம் பற்றி கேட்க 2 நாட்களுக்கு 2000 ரூபாய் என சொல்கிறார். அப்போ மாதம் 24000 ரூபாய் வரும் முல்லை கொடுத்து வைத்தவர் தான் நான் தான் இப்படி இருக்கேன் என மீனா சொல்கிறார். பின் ஜீவா அவங்களுக்கு வீட்டு வாடகை என எல்லாம் இருக்கிறது என சொல்ல, இருந்தாலும் திட்டமிட்டு கிளம்பிட்டாங்க என சொல்கிறார். முல்லையை பற்றி நினைக்காமல் அண்ணி எவ்வளவு வேலை செய்கிறார் அவரை பற்றி நினைத்து பார் என ஜீவா சொல்கிறார்.

மறுபக்கம் தனம் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க ஐஸ்வர்யா வந்து கண்ணன் வேலைக்கு பணம் ரெடி பண்ணிடீங்களா என கேட்கிறார். மூர்த்தி அதற்கு நேரம் இருப்பதாக சொல்ல, ஆமாம் ஆனால் சீக்கரம் கொடுத்தால் நல்லது தான என கேட்கிறார். அதை கேட்டு மீனாவிற்கு கோவம் வருகிறது. பின் ஜீவாவிடம் இதுவே நான் கேட்டால் என் மீது கோவப்பட்டு இருப்ப என சொல்ல, ஜீவா அமைதியாக இருக்க சொல்கிறார். பின் ஐஸ்வர்யா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க மீனா வந்து ஏன் இப்படி பணம் கேட்டாய் என கேட்கிறார். கண்ணன் வேலைக்காக தான என சொல்ல, பணம் கொடுத்து வேலை கிடைக்காமல் போனால் என்ன செய்வாய் என கேட்கிறார். வேலை கிடைக்காமல் போனால் விட்டுவிட வேண்டியது தான் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

உடனே மீனா கிடைக்காத அந்த வேலைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என சத்தம் போட தனம் வருகிறார். தனம் என்ன ஆச்சு என கேட்க, வேலைக்கு பணம் கேட்டதை பற்றி கேட்கிறார் என சொல்கிறார். பின் மீனா கிடைக்காத வேலைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என சொல்ல, ஐஸ்வர்யா உங்களுக்கு என்ன என கேட்கிறார். பின் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து கொண்டு வந்தது போல கேட்கிறாள் என சொல்ல தனம் அவள் என்னிடம் தான் கேட்கிறாள் உனக்கு என்ன என சொல்கிறார். பின் மீனா இந்த வீட்டில் அவள் மட்டும் பேசுகிறாள் என சொல்ல, உடனே தனம் மீனா உனக்கு என்ன பணம் வேண்டும் கேளு என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா தேவை இல்லாமல் என்னிடம் வம்பிழுப்பதாக சொல்ல, இப்படி தான் கதிர் மாமா போன போது பேசினார் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here