அதிக வரவேற்பை பெறும் JIO வின் ரூ.75 திட்டம் – Airtel ரூ.49 ப்ரீபெய்டு திட்டம் ரத்து!

0
அதிக வரவேற்பை பெறும் JIO வின் ரூ.75 திட்டம் - Airtel ரூ.49 ப்ரீபெய்டு திட்டம் ரத்து!
அதிக வரவேற்பை பெறும் JIO வின் ரூ.75 திட்டம் - Airtel ரூ.49 ப்ரீபெய்டு திட்டம் ரத்து!
அதிக வரவேற்பை பெறும் JIO வின் ரூ.75 திட்டம் – Airtel ரூ.49 ப்ரீபெய்டு திட்டம் ரத்து!

ஏர்டெல் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த குறைந்தபட்ச ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.49 திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஜியோவின் ப்ரீபெய்டு பிளான் மக்களிடையே அதிக வரவேற்பை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏர்டெல் முடிவு:

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் மிகவும் வெற்றிகரமான மற்றும் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு நிறுவனமாக விளங்குகிறது. சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் அதிக சலுகைகளை மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குறைந்த விலையில் அதிக பலன்களை அளிக்க கூடிய பல திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் மக்களிடையே மிகவும் பிரபலனமான திட்டமான குறைந்த பட்ச ப்ரீபெய்ட் திட்டத்தை ரத்து செய்துள்ளது.

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்?- முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை!

ஏர்டெல்லின் ரூ .49 திட்டம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் கட்டணங்களை மாற்றி அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் ஏர்டெல்லின் குறைந்த பட்ச ரீசார்ஜ் ரூ .79 ஆக அதிகரித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த முடிவினால் ஜியோ நிறுவனத்தின் திட்டமான ரூ.75 ரீசார்ஜ் திட்டம் மக்களிடம் அதிகம் சேரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

TN Job “FB  Group” Join Now

ரூ .75 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 300 நிமிட இலவச கால்கள், 0.1 ஜிபி அதிவேக இணையம் மற்றும் ஒரு நாளைக்கு 50 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.75 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ .64 டாக் டைம் (106 நிமிட கால்கள் ) மற்றும் 200 எம்பி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here