Airtel, Jio, Vodafone நிறுவனங்களில் ரூ.500க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம்!

0
Airtel, Jio, Vodafone நிறுவனங்களில் ரூ.500க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம்!
Airtel, Jio, Vodafone நிறுவனங்களில் ரூ.500க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம்!
Airtel, Jio, Vodafone நிறுவனங்களில் ரூ.500க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ. 500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

மக்கள் அதிகமாக ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிய நிலையில், பல தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரூ. 500 க்கு குறைவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பல OTT தலங்கள் குறித்த நன்மையை வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலும் ரூ.259 ஜியோ ரீசார்ஜ் திட்டம் ஒரு மாதத்திற்கு 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ரூ.299 ஜியோ ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Exams Daily Mobile App Download

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.209 ஏர்டெல் ரீசார்ஜ் பேக் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது 21 நாட்கள் செல்லுபடியாகும் மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ 265 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 56 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.479 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் மற்றும் 3 மாத இலவச அப்பல்லோ மெம்பர்ஷிப் கொடுக்கப்படுகிறது.

Vodafone Idea ரீசார்ஜ் திட்டங்கள்:

வோடஃபோன் வழங்கும் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கி வருகிறது. இது 18 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் ரூ.209 வோடபோன் ஐடியா (Vi) ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இது 21 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.249 வோடபோன் ரீசார்ஜ் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புக்களை 21 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.239 வோடபோன் ரீசார்ஜ் பேக்கில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை 21 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 31 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் நள்ளிரவுக்கான இலவச டேட்டா நன்மை சலுகை (12AM-6AM) வழங்கப்படுகிறது.

ரூ.499 வோடபோன் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வழங்குகிறது. மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவிற்கு 1 வருட இலவச அணுகல் மற்றும் நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இலவச வரம்பற்ற டேட்டா, கூடுதல் கட்டணமின்றி மற்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!