Airtel, Jio மற்றும் Vi சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டம் – முழு விவரங்கள்!

0
Airtel, Jio மற்றும் Vi சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டம் - முழு விவரங்கள்!
Airtel, Jio மற்றும் Vi சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டம் - முழு விவரங்கள்!
Airtel, Jio மற்றும் Vi சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டம் – முழு விவரங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இந்தியாவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல இலாபகரமான போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றை பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

போஸ்ட்பெய்ட் திட்டம்:

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குவது போல் பல நல்ல சலுகைகளுடன் கூடிய போஸ்ட்பெய்டு திட்டங்களையும் வழங்கி வருகிறது. மாதம் தோறும் தங்களது தேவைக்கு தக்க படி உள்ள திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், தற்போது பல புதிய சலுகைகளுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை நல்ல பலன்களுடன் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் மாற்ற விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு – கோரிக்கை!

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்:

ஏர்டெல் அடிப்படை ரூ .749 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரத்து செய்த்துள்ளது. அதற்கு பதிலாக ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகளை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வழக்கமான இணைப்புடன் இரண்டு குடும்ப உறுப்பிப்பினர்களுக்கும் இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் கைபேசி பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

லையன்ஸ் ஜியோ ரூ .999 போஸ்ட்பெய்ட்:

இந்த திட்டத்தில் மூன்று கூடுதல் குடும்ப சிம் கார்டுகள் வழங்கபடுகிறது. இதில், மொத்தம் 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த லிமிட் முடிந்த பிறகு ஒரு ஜிபிக்கு ரூ .10 வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோநியூஸ் போன்ற பல்வேறு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ அல்லது டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபிக்கு சந்தாவைப் பெறலாம்.

CBSE 10, 12ம் வகுப்பு நேரடி தேர்வுகள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம் – தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

வோடபோன் ஐடியா ரூ .1099 ரெட்எக்ஸ் போஸ்ட்பெய்ட்:

இந்த திட்டத்தில் ஒற்றை இணைப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக, பயனர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கு வருடத்திற்கு நான்கு முறை கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது. கூடுதல் நன்மைகளில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் VI திரைப்படங்கள் மற்றும் டிவி விஐபி அணுகலுக்கான ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ ஒரு முறை பயன்படுத்தும் வசதி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!