Airtel, Jio, VI நிறுவனத்தின் தினசரி 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Airtel, Jio, VI நிறுவனத்தின் தினசரி 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel, Jio, VI நிறுவனத்தின் தினசரி 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Airtel, Jio, VI நிறுவனத்தின் தினசரி 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றனர். இதையடுத்து இதில் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரிச்சார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை இருந்தது. அதனால் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக தங்கள் மொபைலை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர். அத்துடன் தினசரி வழங்கப்படும் டேட்டாவின் அளவை தாண்டி பயன்படுத்தினர். அதனால் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வீதத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 1 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு, இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!

அந்த வகையில் தற்போது நாள் ஒன்றுக்கு 2 GB அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டங்களை ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் முதலாவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம். இதில் ரூ. 249க்கு ரீசார்ஜ் செய்வதால் தினசரி 2ஜிபி டேட்டாவையும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பலன்களையும் வழங்கிறது. இது 23 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அத்துடன் ரூ. 499க்கு ரீசார்ஜ் செய்வதால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

அத்துடன் ரூ. 533க்கு ரிச்சாஜ் செய்வதால் 56 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்டவை பெற முடியும். மேலும் ரூ.719க்கு ரிச்சாஜ் செய்வதன் மூலமாக 84 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகிய பலன்கள் கிடைக்கிறது. தற்போது ஏர்டெல் நிறுவனம் வழங்கும் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் ரூ. 299க்கு ரிச்சர்ஜ் திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டாவுடன், 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பலன்களையும் பெற முடியும்.

இதில் ரூ. 839க்கு ரீசார்ஜ் செய்வதால் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்களை பெற முடியும். அத்துடன் ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்த 2 ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அவை ரூ. 2999 /- மற்றும் ரூ. 3359 /- ஆகும். இதன் மூலமாக 2ஜிபி டேட்டா என வருடத்திற்கு 730 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் தினமும் 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிக்கை!!!

இதனை தொடர்ந்து வோடபோன் நிறுவனத்தால் வழங்கப்படும் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் ரூ. 359க்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பலன்கள் கிடைக்கிறது. இதையடுத்து ரூ. 539க்கு ரீசார்ஜ் செய்வதால் 56 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் கிடைக்கிறது. அடுத்ததாக ரூ. 839க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாள் வேலிடிட்டிடன் தினசரி அதிவேக 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. அத்துடன் 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க் சேவைகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பெற முடிகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!