Airtel, BSNL மற்றும் Jio பிரீமியம் ஃபைபர் திட்டம் – அதிக பலன்கள்!!

0
Airtel, BSNL மற்றும் Jio பிரீமியம் ஃபைபர் திட்டம் - அதிக பலன்கள்!!
Airtel, BSNL மற்றும் Jio பிரீமியம் ஃபைபர் திட்டம் - அதிக பலன்கள்!!
Airtel, BSNL மற்றும் Jio பிரீமியம் ஃபைபர் திட்டம் – அதிக பலன்கள்!!

ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பிராட்பேண்ட் திட்டங்களை கிட்டத்தட்ட ஒரே விலையில் வழங்கி வரும் நிலையில், அவற்றிற்கு இடையிலான நன்மைகளும் ஒரே மாதிரியாகவே வழங்கப்படுகிறது.

பிராட்பேண்ட் திட்டம்:

பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வகையான இணைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பதிவில், மூன்று நிறுவனங்களும் வழங்கும் சேவைகளையும், பலன்கையும் குறித்து காண்போம்.

ஜியோ ஃபைபர் ரூ .1499 பிராட்பேண்ட் திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் பல்வேறு வகையான பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. ஜியோ ஃபைபர் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம் 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. இது தவிர அன்லிமிடெட் கால்களையும் வழங்குகிறது. பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 3300GB வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

கூடுதலாக, இந்த திட்டத்தின் மூலம் நெட்ஃபிக்ஸ் , அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ 5, வூட் செலக்ட், வூட் கிட்ஸ், ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஹோய்சோய், ஏஎல்டி பாலாஜி மற்றும் பல தளங்களுக்கு OTT சந்தாக்கள் வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோக்கு 1 வருட இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம்:

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம் 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் மற்றும் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி கால்களையும் வழங்குகிறது. பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 3300GB வழங்கப்படுகிறது. ஏர்டெல் தாங்ஸ் ஆப் நன்மைகளும், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாக்களும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 1499 ஃபைபர் அல்ட்ரா-பிராட்பேண்ட் திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் வேலை மற்றும் பொழுதுபோக்கு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரிவான பிராட்பேண்ட் திட்டங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் ஃபைபர் சந்தாதாரர்களுக்கு 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் கிடைக்கும். பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 4000GB வழங்கப்படுகிறது. அதன்பிறகு, இணைய வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி கால்களையும் வழங்குகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் பிரீமியம் பேக்கிற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!