Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் – ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!

0
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் - ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் - ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் – ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!

நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ மக்களுக்கு அதிக அளவில் பலன்களை கொண்ட பல ப்ரீபெய்டு திட்டங்களை வைத்துள்ளது. அவற்றை பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்:

தற்போதைய பெருந்தொற்று காலத்தில் மக்களை ஒருவருக்கொருவர் இணைப்பதற்கு இணையம் தான் ஒரே வழி. அதுமட்டுமில்லாமல் கல்வி முதல் வணிகள் வரை அனைத்தும் இணைய வழியில் தான் நடக்கிறது. இதனால் இணையம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.

ஏர்டெல் :

முன்னணி நிறுவனமான ஏர்டெல் ரூ.298, ரூ.449, ரூ.698 மற்றும் ரூ.699 என்ற பல விலைகளிலும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், 100 எஸ்எம்எஸ் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.298 மதிப்புள்ள திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.449 மதிப்புள்ள திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ரூ.698 மதிப்புள்ள திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

மேலும், ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 56 நாட்கள் கிடைக்கிறது. மேலும், இதனுடன் அமேசான் ப்ரைம் வீடியோக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.

ஜியோ:

ரூ.249, ரூ.444, ரூ.599, ரூ.666 மற்றும் ரூ.888 என்ற மதிப்பில் ஜியோ நிறுவனம் தினசரி 2 ஜிபி தினசரி டேட்டா வழங்குகிறது. இதனுடன் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. மேலும், ரூ .249 பிளான் 28 நாட்கள், ரூ.444 பிளான் 56 நாட்கள் மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் பிளான் 84 நாட்களும் கிடைக்கிறது. ஆனால் ரூ.666 திட்டத்தில் இந்த திட்டத்துடன் ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தா கிடைக்கிறது. ரூ.888 மதிப்புள்ள திட்டத்தில் இதே சலுகைகளுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

விஐ நிறுவனம்:

ரூ.299, ரூ.449 மற்றும் ரூ .699 என்ற மதிப்புள்ள திட்டங்களில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டங்கள் டபுள் டேட்டா திட்டத்தில் உள்ளதால் மேலும் 2 ஜிபி டேட்டாவை அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியுடன் வழங்குகிறது. ரூ.501, ரூ.701 மற்றும் ரூ.901 திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அம்சம் வழங்கப்படுகிறது. இவை முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்ற வேலிடிட்டியில் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!