தமிழகத்தில்`எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கும்படி அக்டோபர் 3 ஆம் தேதி ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் நேற்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், இரண்டு வருட ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் பணியிடம் குறைப்பு என்கிற பெயரில் ஊழியர்களை நிரந்தரமாக வெளியே அனுப்பும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எப்போது? – தொடரும் காத்திருப்பு!
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 3 ஆம் தேதி டெல்லி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலகத்தின் முன்பு தேசிய அளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்தில், முக்கிய தலைவர்களான சேலம் மாவட்ட தலைவர், மாவட்டத் துணைத் தலைவர், மாவட்ட இணை செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவும் முடிவிடுக்கப்பட்டுள்ளது.