பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு – AICTE எச்சரிக்கை!

0
பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு - AICTE எச்சரிக்கை!
பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு - AICTE எச்சரிக்கை!
பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு – AICTE எச்சரிக்கை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான சிறப்பு விதியை அறிமுகப்படுத்தி, அதன் கீழ் அனைத்து ஆசிரியர் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்குமாறு AICTE உத்தரவிட்டுள்ளது.

ஊதியம் வழங்கல்:

இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றுமாறு எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவுமாறு சட்டக்குழு, பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது கொரோனா பேரிடர் காலத்தில் சில பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு சேவைகள் நிறுத்தம், சம்பளம் வழங்காதது குறித்த புகார்களை பெற்று வருவதாக AICTE தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவையில் கனமழையுடன் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இதனிடையே சமீபத்தில் AICTE அளித்துள்ள சுற்றறிக்கையில், கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் முழு கட்டணத்தையும் செலுத்துமாறு நிர்வாகங்கள் வற்புறுத்த வேண்டாம் என்றும், நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மூன்று அல்லது நான்கு தவணைகளில் கட்டணத்தை வசூலிக்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்கள் கட்டணம் தொடர்பான விளக்கத்தை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மாணவர்களையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர ஆசிரியர் மற்றும் கல்லூரி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக AICTE கூறுகையில், ‘ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் பிற நிலுவைத்தொகை மாதந்தோறும் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். மேலும் ஊரடங்கின் போது செய்யப்பட்ட பணி நீக்கங்களும் திரும்ப பெறப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் இந்த வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here