கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை – AICTE வெளியீடு!
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியைத் திருத்தியுள்ளது. புதிய AICTE நாட்காட்டியின் படி முதல் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1 முதல் துவங்கும்.
நாட்காட்டி வெளியீடு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியைத் திருத்தியுள்ளது. இந்த புதிய AICTE காலண்டரின் படி, முதல் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு கட்டணத் தொகையுடன் தொழில்நுட்ப படிப்புகளுக்கான இடங்களை ரத்து செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு, இரவு ஊரடங்கு அமல் – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
இதற்கு முன்னதாக கட்டணத் தொகையை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 15 வரை கொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி AICTE ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை முதுகலை பட்டயங்களுக்கான தனித்தனி PGDM அல்லது PGCM நிறுவனங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் PGDM மற்றும் PGCM நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர தொழில்நுட்ப படிப்புகளில் முதல் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 20 முதல் அக்டோபர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்க்கை செயல்முறையை முடித்து, முந்தைய அட்டவணையின்படி வகுப்புகளைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு இந்தக் கல்வி நாட்காட்டி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
இது போன்ற சந்தர்ப்பங்களில், ஜூலை 12 அன்று வெளியிடப்பட்ட கல்வி நாட்காட்டியின் படி, மாணவர் சேர்க்கைகளை ரத்து செய்வதற்கான முழு கட்டணத்தொகையை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 6 ஆக கொடுக்கப்பட்டிருந்தது. தவிர AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் AICTE அல்லது UGC வகுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு AICTE வலியுறுத்தியுள்ளது.