அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் – கட்சியினர் இரங்கல்!

0
அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் - கட்சியினர் இரங்கல்!
அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் - கட்சியினர் இரங்கல்!
அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் – கட்சியினர் இரங்கல்!

தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர் புலமைப்பித்தன். இவருக்கு 86 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று இயற்கை எய்தினார்.

புலமைப்பித்தன்:

பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவராக இருந்து வந்தவர் தான் புலமைப்பித்தன். இவர் 1935 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி. இளமைக் காலத்தில் இரவில் பஞ்சாலையில் பணியாற்றியும் பகலில் பேரூர் தமிழ்க் கல்லூரியில் படித்து வாழ்க்கையில் உயர்ந்தவர். அவருக்கு 1961ல் புலவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆத்தூரில் ஆசிரியர் பணியை தொடங்கினர்.

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் – இன்று வெளியீடு!

முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நான் யார் நான் யார் நீ யார்…’ என்ற பாடலை எழுதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து கே.வி.மகாதேவன் இசையில் ‘அடிமைப்பெண்’ படத்தில் பாடல்களை எழுதியது தொடர்ந்து ‘உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’ என பல்வேறு வெற்றி பாடல்களை எழுதியவர். மேலும் இவர் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 4 முறை பெற்றவர். மேலும் அதிமுகவில் அவைத்தலைவராகவும் இருந்து வந்தார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு!

2015 ஆம் ஆண்டில் வடிவேலு நடித்த எலி படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதினார். தற்போது 86 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. எம்ஜிஆர் உள்ளிட்ட 100 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் இவர். மேலும் இவர் எம்ஜிஆரின் மிக நெருக்கமான ஒருவர் எனவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!