ஆகஸ்ட் 13 ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!
நாளை மறுநாள் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டம் வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடக்க இருப்பதாக அதிமுக அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 13.08.2021 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஆலோசனை கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.