போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் குறித்து ஒப்பந்தம் – அமைச்சர் விளக்கம்!

0
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் குறித்து ஒப்பந்தம் - அமைச்சர் விளக்கம்!
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் குறித்து ஒப்பந்தம் - அமைச்சர் விளக்கம்!
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் குறித்து ஒப்பந்தம் – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முக்கிய அம்சங்கள் பற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை:

தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் பல ஏழை பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இதை தவிர விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. மேலும், தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை அறிந்து உடனடியாக அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை குரோம்பேட்டையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 7 கட்டங்களாக நடைபெற்று இன்று முடிவுற்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.

Post Office ல் முதலீடு செய்தால் 2 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!

அதாவது,

அடிப்படை ஊதியமானது போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு 1.9.2019 அன்று கீழ்க்கண்டவாறு அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். 31.8.2019 அன்று பெற்று வந்த அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

Exams Daily Mobile App Download

இடைக்கால நிவாரணம் 1.2.2001 முதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த இடைக்கால நிவாரணமானது தற்போதைய ஒப்பந்தப்படி 1.1.2022 முதல் 31.7.2022 வரையிலான நிலுவைத் தொகையில் நேர் செய்யப்படும்.

ஓய்வூதியர்கள் குடும்பத்தினருக்கு பயண சலுகை வழங்கப்படும்.

குடும்ப நல நிதி ஒவ்வொரு மாதமும் ரூ.60 பிடித்தம் செய்து இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்காக தொழிலாளர்களிடம் மாதம் ரூ.150 பிடித்தம் செய்யப்படும். இந்த உயர்வுகள் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும்.

மேலும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக ஒரு பணிக்கு ரூ.300 வழங்கப்படும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here