அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.40,000 வரை சம்பளம்!

0
அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.40,000 வரை சம்பளம்!
அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.40,000 வரை சம்பளம்!
அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.40,000 வரை சம்பளம்!

இந்திய கடற்படையில் உள்ள காலிப்பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் வேலை

இந்தியாவில் அக்னிபாத் திட்டத்தின் வாயிலாக அக்னிவீர்ஸ் மாலுமிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, அக்னிவீர்ஸ் மாலுமி பணிக்கு மொத்தமாக 200 காலிபணியிடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு என்று தனியாக 40 காலிபணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பணியிடங்களில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு சேவையின் முடிவில் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கமும் பல விதமான பங்களிப்பை வழங்குகிறது.

ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் அபாயம் – மத்திய அரசின் புது விதிமுறைகள்!

எழுத்து தேர்வு, உடல் தகுதித் தேர்வு (PFT) மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் திறமையான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், 1 டிசம்பர் 1999 முதல் 31 மே 2000 வரை பிறந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் joinindiannavy.org என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும், இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30 தான் கடைசி தேதி என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.30,000ம், இரண்டாம் ஆண்டில் ரூ.33,000ம், மூன்றாம் ஆண்டில் ரூ.36,500ம், நான்காம் ஆண்டில் மாதம் ரூ.40,000 சம்பளமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here