அக்னிபாத் திட்டம்: வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் – பாதுகாப்புத்துறை அறிவிப்பு!

0
அக்னிபாத் திட்டம்: வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் - பாதுகாப்புத்துறை அறிவிப்பு!
அக்னிபாத் திட்டம்: வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் - பாதுகாப்புத்துறை அறிவிப்பு!
அக்னிபாத் திட்டம்: வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் – பாதுகாப்புத்துறை அறிவிப்பு!

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் அக்னி வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பாதுகாப்புதுறையும் அக்னி வீரர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம்:

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்ற ‘அக்னிபாத்’ என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின்பு இவர்களில் 25% பேர் மட்டும் தரைப்படை விமானப்படை மற்றும் கப்பற்படையில் உள்ளிட்ட முப்படைகளில் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அதன்படி இவர்கள் மீண்டும் 15 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் இதில் 75% பணியில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் பணியில் இருந்து விடுவிக்கப்படும் 75% பேருக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக 11 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இதற்கு வரிவிலக்கு உண்டு. மேலும் இதில் ஓய்வூதியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏனெனில் 4 வருடங்களுக்கு பிறகு இளைஞர்கள் வெளியேற்றப்படுவதால் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இதையடுத்து தற்போது இந்த திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

அக்னிபாத் வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பின் அரசுப்பணி? முதல்வர் உத்தரவு!

இதில் குறிப்பாக அரசு போட்டித்தேர்வில் அக்னிபாத் திட்டத்தில் உள்ள அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ராணுவப்பணி என்பது ஒரு வேலைவாய்ப்பு அன்று, இதில் தேசபக்தியுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்னி வீரர்களுக்கு அவர்கள் பணியாற்றும் வீர தீர செயல்களுக்காக விருதுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறைமைகள் வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் 50 வீரர்களில் ஒரு தகுதியான வீரர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here