TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நிர்ணயம் – தேர்ச்சி பெற்றாலும் பணியில் சேர முடியாத சூழல்!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் டெட் தேர்ச்சி பெற்று, 40 வயதைக் கடந்த பி.எட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் கல்வி முடித்த தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக்கு பணி வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 5 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
இந்த நிலையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முதலாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. 40 வயதை கடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பட்டியலினத்தவர்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வயது வரம்பு ஆசிரியர் கல்வி முடித்து அரசு பணியில் சேர வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு ஷாக் அறிவிப்பு – 2 மாதங்களில் 87% பேர் உயிரிழப்பு!
இதுவரை தமிழகத்தில் 1.50 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வேண்டி காத்திருக்கின்றனர். இவர்களில் 50,000 பேர் 40 வயதை கடந்தவர்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விலும் வயது வரம்பை பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால், டெட் தேர்ச்சி பெற்ற 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.