மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதில் இருந்து படிப்படியாக மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநில அரசு தங்களது ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியினை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் 3% DA உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு உயர்த்தப்பட்டது. அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 28% லிருந்து 3% உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்கியது.

டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 144 தடை உத்தரவு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசுக்கு பரிந்துரை!

அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 28ம் தேதி அகவிலைப்படியை 28% ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படியில் 3% உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அகவிலைப்படி உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜன.1 மற்றும் ஜூலை 1 என்று ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் 28% அகவிலைப்படியில் இருந்து 3% உயர்த்தி 31% வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here