விமானப்படை பள்ளியில் சூப்பர் வேலை – முழு விவரங்களுடன்! இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
விமானப்படை பள்ளியில் சூப்பர் வேலை - முழு விவரங்களுடன்! இன்றே விண்ணப்பியுங்கள்..!
விமானப்படை பள்ளியில் சூப்பர் வேலை - முழு விவரங்களுடன்! இன்றே விண்ணப்பியுங்கள்..!
விமானப்படை பள்ளியில் சூப்பர் வேலை – முழு விவரங்களுடன்! இன்றே விண்ணப்பியுங்கள்..!

AFS எனும் விமானப்படை பள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் PGT, TGT, Lab Attendant, Watchman பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Air Force School வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியான அறிவிப்பில், விமானப்படை பள்ளியில் (AFS) காலியாக PGT மற்றும் TGT பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதமும், Lab Attendant மற்றும் Watchman பணிக்கு தலா 01 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. PGT, TGT பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது UGC / AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Bio Chemistry, English போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Lab Attendant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PGT, TGT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் CTET / STET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் MS Office போன்ற கணினி செயல்பாடுகளில் வல்லுநராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வின்னதாரர்கள் ஹிந்தி மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணி, தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப AFS நிறுவனத்தால் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (20.06.2022) முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

AFS Job Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here