இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய்த் தொற்று – மத்திய அரசு எச்சரிக்கை!

0
இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய்த் தொற்று - மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய்த் தொற்று - மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய்த் தொற்று – மத்திய அரசு எச்சரிக்கை!

அசாம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று பரவி வந்த நிலையில் தற்போது முதன்முறையாக கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல்:

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கன்னியாரம் பகுதிகளில் உள்ள இரண்டு வளர்ப்பு பண்ணைகளில் 5 பன்றிகள் உயிரிழந்துவிட்டன. இதன் பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் பன்றிகளின் உடல் உறுப்புகளை கேரள கால்நடை துறையினர் சேகரித்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் அனைத்தும் போபாலில் உள்ள பன்றி காய்ச்சல் ஆராய்ச்சி மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலினால் தான் இந்த 5 பன்றிகளும் உயிரிழந்துவிட்டதாக போபாலில் உள்ள ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் என்பது மிகவும் ஆபத்தான பன்றி காய்ச்சலில் ஒன்றாகும். அதாவது, இந்த பன்றி காய்ச்சல் நோய் மனிதனுக்கு பரவாது என்றாலும் கூட அந்த பண்ணையில் வேலை பார்த்து வரும் வேலையாட்கள் மூலமாக மற்ற பன்றிகளுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கேரளாவிலும் தொற்று பரவியுள்ளது.

ஆதார் அட்டை தாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – UIDAI அறிவிப்பு!

இந்நிலையில், கேரளாவிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையிலும் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வயநாடு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளை கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பன்றி காய்ச்சலை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் முடுக்கப்பட்ட நிலையில் கன்னியாரம் பகுதிகளில் உள்ள வளர்ப்பு பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொன்றுவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here