T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

0
T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்க உள்ள நடப்பாண்டுக்கான டி-20 கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி-20 உலக கோப்பை:

ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின்னர், ஆப்கானிஸ்தானிலிருக்கும் அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்ப நாட்டிற்கு அழைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து வீர்ரகளும் நாடு திரும்புவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் ஆப்கானில் தாலிபான்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.

கார் & நகைக் கடன்களுக்கான சிறப்பு சலுகை – SBI வங்கி அறிவிப்பு!

இவர்களுக்கு பயந்து நாட்டு மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி நாட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இப்படி ஒரு கலவரமான சூழல் ஆப்கானிஸ்தானில் நிலவி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை டி20 உலகக் கோப்பை போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்த டி – 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் அசாதாரண சூழலிலும் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கான் அணி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க உள்ளோம். மேலும், உள்ளூர் டி20 போட்டிகளை நடத்த உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!