ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண்கள் அடங்கிய விளம்பர புகைப்படங்கள் அளிப்பு – தலிபான்கள் அட்டூழியம்!

0
ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண்கள் அடங்கிய விளம்பர புகைப்படங்கள் அளிப்பு - தலிபான்கள் அட்டூழியம்!
ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண்கள் அடங்கிய விளம்பர புகைப்படங்கள் அளிப்பு - தலிபான்கள் அட்டூழியம்!
ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண்கள் அடங்கிய விளம்பர புகைப்படங்கள் அளிப்பு – தலிபான்கள் அட்டூழியம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது அதிகாரத்தை கையில் எடுத்துள்ள தலிபான்கள் சலூன் உள்ளிட்ட சில கடைகளில் விளம்பரத்துக்காக வரையப்பட்டிருந்த பெண்களின் புகைப்படங்களை வெள்ளை நிற பெயிண்ட் மூலமாக அளித்து வருகின்றனர்.

தலிபான்கள் அட்டூழியம்:

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களான தலிபான்களுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன் படி ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் தங்களது கைவரிசையை காட்ட துவங்கியுள்ளனர். அதாவது ஆப்கானிஸ்தானை முழுவதுமாக இஸ்லாமியர்களின் நாடக மாற்ற எண்ணிய தலிபன்கள் இந்த 20 ஆண்டு கால போரை நடத்தினர். அவர்களது நோக்கம் தற்பொழுது நிறைவேறியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற ஆப்கானிஸ்தர்கள் – நடுவானில் கீழே விழுந்து பலி!

இந்த கொடுமையான சூழலை பார்க்கும் உலக மக்கள் அந்நாட்டு மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ள தலிபான்கள் தற்போது தனது நோக்கத்தை ஒவ்வொன்றாக நிறைவேற்ற துவங்கியுள்ளனர். அந்த வகையில் முதலாவதாக ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் இயங்கும் சலூன் கடைகளில் விளம்பரங்களுக்காக வரையப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை மறைக்க ரோலர் மற்றும் வெள்ளை வண்ணப்பூச்சு செய்து வரும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

இதற்கு முன்னதாக தலிபான் தீவிரவாதக் குழு “பெண்களின் உரிமைகளை மதிக்கும். எங்கள் கொள்கை என்னவென்றால், பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிய வேண்டும். அவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியிருந்த போதிலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கிடையில் தலிபான்கள் கைப்பற்றிய பகுதிகளிலில் இருக்கும் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என்றும், சில பெண் ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைகள் இப்போது ஆண்களால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!

இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் பெண்கள் கடந்த 20 வருடங்களில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றும் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான சிலரது கருத்துக்கள், ‘இந்த படம் ஆப்கானிஸ்தான் பெண்களின் இருண்ட எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது’ என கூறுகிறது. மேலும் முந்தைய தலிபான் ஆட்சியின் கீழ், ஆப்கானிஸ்தான் பெண்கள் வேலை செய்யவோ, படிக்கவோ அல்லது ஆண் டாக்டர்களால் சிகிச்சை அளிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, தீவிரவாதிகள் ஷரியா சட்டத்தின் ஒரு பதிப்பாக விபச்சாரத்திற்கு கல்லெறிதல், திருட்டுக்காக கைகால்களை வெட்டுதல் மற்றும் 12 வயதுக்கு மேல் பெண்கள் பள்ளிக்கு செல்வதைத் தடுப்பது ஆகியவற்றை செயல்படுத்தி வந்தனர் என்பது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!