அக்னிபாத் வீரர்களுக்கு 48 லட்சம் இன்சூரன்ஸ், தனி சீருடை & 30 நாள் லீவு – IAF அறிக்கை வெளியீடு!

0
அக்னிபாத் வீரர்களுக்கு 48 லட்சம் இன்சூரன்ஸ், தனி சீருடை & 30 நாள் லீவு - IAF அறிக்கை வெளியீடு!
அக்னிபாத் வீரர்களுக்கு 48 லட்சம் இன்சூரன்ஸ், தனி சீருடை & 30 நாள் லீவு - IAF அறிக்கை வெளியீடு!
அக்னிபாத் வீரர்களுக்கு 48 லட்சம் இன்சூரன்ஸ், தனி சீருடை & 30 நாள் லீவு – IAF அறிக்கை வெளியீடு!

அக்னி பாத் என்ற திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதில் சேருவதற்கான 29 விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

IAF வெளியிட்ட அறிக்கை:

கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆளெடுப்பு திட்டத்தை முப்படைகளின் தளபதிகள் வெளியிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 152 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!

இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சேர்க்கை முதல், சீருடை, ஊதியம், இன்சூரன்ஸ், விடுமுறை ஆகிய தகவல்களுடன் 29 வகையான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகளுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. பதிவுச் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ‘அக்னிவீரரும்’ அக்னிபாத் திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முறையாக ஏற்க வேண்டும்.

1.18 வயதுக்குட்பட்ட பணியாளர்களுக்கு, தற்போது உள்ள விதிகளின்படி, பெற்றோர்/பாதுகாவலர்களால் பதிவுப் படிவத்தில் கையொப்பம் இடப்பட வேண்டும்.

2. 4 வருட காலத்திற்குப் பிறகு, அனைத்து அக்னிவீரர்களும் படையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

3. நிறுவனத் தேவைகள் மற்றும் IAF வெளியிடும் கொள்கைகளின் அடிப்படையில், வெளியேறிய அக்னி வீரர்கள் வழக்கமான கேடரில் IAF ல் சேர்வதற்கு விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

4. பணி காலத்தின் போது 48 லட்ச ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனவும் 18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் இணையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

5. ராணுவத்தினருக்கான உயர்தர ஆன்லைன் தரவுத்தளம் பராமரிக்கப்பட்டு அதில் ஒவ்வொருவரின் தனித்தன்மை குறித்து விவரங்கள் குறிப்பிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

6.தகுதியான வயது 17.5 வயது முதல் 21 வயது வரை இருக்கும். பிற கல்வித் தகுதிகள் மற்றும் உடல் தரநிலைகள் இந்திய விமானப்படையால் வழங்கப்படும்.

7.இளைஞர்களின் சுறுசுறுப்பை ஊக்குவிக்கவும் அங்கீகரிக்கவும், அக்னி வீரர்கள் நிச்சயதார்த்த காலத்தில் அவர்களின் சீருடையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அணிவார்கள்.

8.ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவ விடுப்பும் உண்டு என கூறப்பட்டுள்ளது.

9. நான்கு ஆண்டு முடிவதற்குள் ராணுவத்தினர் தங்கள் சொந்த கோரிக்கையின்படி விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும், இருப்பினும் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன எனவும் இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!