NEET UG தேர்வுக்கான அட்மிட் கார்டு – விரைவில் வெளியீடு?

0
NEET UG தேர்வுக்கான அட்மிட் கார்டு - விரைவில் வெளியீடு?
NEET UG தேர்வுக்கான அட்மிட் கார்டு - விரைவில் வெளியீடு?
NEET UG தேர்வுக்கான அட்மிட் கார்டு – விரைவில் வெளியீடு?

வரும் ஜூலை 17ம் தேதியன்று நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கான அட்மிட் கார்டு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி, அட்மிட் கார்டு வெளியானதும் விண்ணப்பதாரர்கள் nta.ac.in என்ற இணையதளம் மூலம் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

அட்மிட் கார்டு

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் UG வரும் 17ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் பத்து நாட்களே மீதமிருக்கும் நிலையில் இதற்கான அட்மிட் கார்டு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பங்களை செய்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும், நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சீட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சீட்டு மூலம் மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!

மேலும், கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் ஆகியவற்றை தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜூலை 17ம் தேதியன்று பிற்பகல் 2 முதல் 05.20 மணி வரை நடைபெற இருக்கும் நீட் தேர்வில் கலந்து கொள்பவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!