அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!

0
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!

மேட்டூரில் உள்ள அரசு வனவாசி பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் 2021- 2022 புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி விட்டது. அரசுப் பள்ளிகளில் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகளும் தொடங்கி விட்டது. நடப்பு ஆண்டிலும் தொடர்ந்து கொரோனா பரவல் அச்சம் நீடிப்பதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தற்போதைக்கு ஆரம்பிக்க வாய்ப்பில்லை. ஆன்லைன் வகுப்புகள் தான் நடைபெறும்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு!

இந்நிலையில், மேட்டூரில் உள்ள வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 2021- 2022ம் ஆண்டுக்கான டிப்ளோமா படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் அரசு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், கணினி பொறியியல் ஆகிய 5 பிரிவுகளில் பட்டயபடிப்பை வழங்குகிறது. இங்கு அரசு புதிய கட்டடங்கள், நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற வசதிகளை உருவாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டு பட்டய படிப்பு விண்ணப்பிக்கலாம். கல்லூரியின் சேவை மையம் மூலம் மற்றும் https://www.tngptc.in அல்லது https://www.tngptc.com என்ற அதிகாரபூர்வ இணையத்தளங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூலை 12ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.150 மற்றும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!