தமிழகத்தின் கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 23 முதல் துவக்கம்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை
கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் இந்த கல்வியாண்டும் ஆன்லைன் வழியாக நடைபெற்று வரும் நிலையில் புதிய மாணவர்கள் சேர்க்கை பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஏற்கனவே சில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலையிலேயே கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!
இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் உள்ள 1,20,000 இடங்களுக்காக சுமார் 3 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பப் பதிவுகளை கொடுத்துள்ளனர். இதையடுத்து இம்மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியானது. இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து அதற்கேற்றவாறு மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஏதேனும் சிக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் அரசின் இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் ஒரே நாளில் 34,457 பேருக்கு கொரோனா தொற்று – 375 பேர் உயிரிழப்பு!
இந்த மாணவர் சேர்க்கை பணிகளை கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி முறையிலும், ஆன்லைன் வழியாகவும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம். இது குறித்த தகவல்களை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர் ஒருவர் விண்ணப்பித்த பாடப்பிரிவுக்கு இடங்கள் நிரப்பட்டிருந்தால், அவர்களை வேறு பாடப்பிரிவுகளில் சேர்க்கலாம். மேலும் புதிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் வைத்து கணினி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.