TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – 7ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - 7ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - 7ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – 7ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ராஷ்டிரிய இந்திய மிலிட்டரி கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதன் விவரங்களை மாவட்ட ஆட்சியர் ரா. லலிதா அறிவித்து உள்ளார். எனவே தகுதி உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை யன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

டேராடூன் ராணுவ கல்லூரி:

தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

முழு ஊரடங்கு அமல், பள்ளி & கல்லூரிகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! வன்முறை எதிரொலி!

இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் குறித்த தேதிகள் அறிவித்து உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நேர்முகத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், 2023, ஜனவரி 1 ஆம் தேதியன்று 11 வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமல், 7ஆம் வகுப்பு படிப்பவராகவும், இல்லையெனில் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா. லலிதா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, வங்கிக்கிளையில் மாற்றத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.600 க்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதி சான்றுடன் ரூ.555 க்கு வரைவோலை அனுப்ப வேண்டும். இதற்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!