TN அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

0
TN அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
TN அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
TN அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் அரசு மற்றும் சில தனியார் கல்லூரிகளுக்குத் தான் மாணவர்களிடையே போட்டி இருந்து வருகிறது.

மாணவர்கள் சேர்க்கை:

தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 அன்று வெளியான நிலையில், தற்போது மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இளங்கலை இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், மற்றும் வணிகவியல் படிப்புகளில் சேர மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்த நிலையில், ஜூன் 22 ஆம் தேதி ( இன்று ) முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜூலை 5ம் தேதியன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:

  • முதலில் http://www.tngasa.in அல்லது http://www.tngasa.org என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் பெயர், தொலைப்பேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு முதலில் பதிவு செய்ய வேண்டும்.
  • தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொண்டு, விண்ணப்பம் செய்ய வேண்டும்.
  • இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், முகவரி, கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.
  • பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி : மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.07.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ.48, பதிவுக் கட்டணம் : ரூ. 2

SC/SCA/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆனால் பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும். இந்த விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் வாயிலாகவே மாணவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயர்கல்வி துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம் என்றும் 044-28260098 , 044-28271911 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!