தமிழகத்தில் துணை மருத்துவ பயிற்சி மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

13
தமிழகத்தில் துணை மருத்துவ பயிற்சி மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் துணை மருத்துவ பயிற்சி மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் துணை மருத்துவ பயிற்சி மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாகவும், விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு விட்டது. புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பல கல்வி நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு ஒருங்கிணைந்த பேணுகை மற்றும் திறன் மேம்பாட்டு கல்விக் குழுமம் சேர்க்கை மையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியீடு – எதிர்பார்ப்புகள்!

இளநிலை கண் ஆய்வாளர், செவிலியர் பயிற்சி, மருந்தாளுனர், மருத்துவ உதவியாளர், அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் மயக்கவியல் நிபுணர் போன்ற 4 ஆண்டு படிப்புகளுக்கும், பொது செவிலியர் பயிற்சி 3 வருட படிப்பு போன்ற அனைத்திற்கும் 12ம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாட பிரிவில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் 30.7.2021 அன்று படி வயது 22க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அரசு விதிகளின் படி, தாழ்த்தப்பட்ட, மலை சாதியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு தளர்த்தப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்காக ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். கலந்தாலோசனையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரியில் நிபந்தனையுடன் இடஒதுக்கீடு செய்யப்படும். படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் tnedusupport.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். 15.8.2021 விண்ணப்பிக்க இறுதி நாளாகும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!