தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

0
தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பு மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பு மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர்க்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள் ஆகும்.

மாணவர் சேர்க்கை:

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் என்பது சென்னையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

TNPSC CESSE 537 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்பு!

இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பு (மாலை நேரம்), தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் டிப்ளமோ படிப்பு (வார இறுதி நாட்கள்) ஆகியவை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தமிழக அரசால் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வி தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட படிப்புகள் ஆகும். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு முன்னுரிமை தகுதிகளாக இந்த படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டபடிப்புக்கும், பட்டதாரிகள் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பெயர், தொலைபேசி எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும். இந்த படிப்புகளில் சேர விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 ஆகும். எஸ்டி வகுப்பினர் அவர்களது சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 24 கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை, “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டுடன், பதிவுத் தபால், விரைவு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் குழு தலைவர் ஆர்.ரமேஷ் குமாரை 98841-59410 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!