ஆதித்யா டிவி அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் – குவியும் வாழ்த்துக்கள்!

0
ஆதித்யா டிவி அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் - குவியும் வாழ்த்துக்கள்!
ஆதித்யா டிவி அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் - குவியும் வாழ்த்துக்கள்!
ஆதித்யா டிவி அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் – குவியும் வாழ்த்துக்கள்!

சின்னத்திரை ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அகல்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அகல்யா:

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலரும் மக்களின் மனம் கவர்ந்தவர்களாக உள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறையாமல் அதை ரசிகர்களுக்கு அளிப்பது என்பது தொகுப்பாளர்களின் கடமை. இந்த பணியை மிகவும் ரசித்து செய்பவர்களை மக்கள் பேவரிட் தொகுப்பாளராக மாற்றி விடுகின்றனர். தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களை போல். மக்கள் மத்தியில் நேரிடையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபர்கள் தமிழில் ஒரு சிலர் தான் உள்ளனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் ஆதித்யா தொலைக்காட்சியில் நீங்க சொல்லுங்க டுயூட் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளர் அகல்யா. இவர் மக்கள் மத்தியில் நேரடியாக சென்று கேள்விகளை கேட்கும் நிகழ்ச்சியை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் நகைச்சுவையான கேள்விகளும் இருப்பதால், மிகவும் கலகலப்பாக இருக்கும். அகல்யா ஆதித்யா டிவியில் வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதேபோல், பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறையின் பல பிரபல நடிகர், நடிகைகளையும் பேட்டி எடுத்துள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது கலகலப்பாக பேசினால் தனி அடையாளத்தை பெற்றவர் அகல்யா. தற்போது சின்னத்திரையில் ஒரே விழாக்கோலமாக உள்ளது. பல பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து திருமணங்கள் நடந்து வருகின்றது. அந்த வரிசையில், தற்போது அகல்யாவிற்கு அருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களின் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அகல்யாவின் திருமண செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here