கொரோனா தடுப்பு பணியாக மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – கோவை ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனா தினசரி பாதிப்பு கோவையில் பதிவாகி உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை நோய் தடுப்பு நடவடிக்கையாக அறிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு முன்பிருந்ததை விட குறைந்து உள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தமிழகம் முழுவதும் 1551 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு முற்றிலும் அற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இதனால், செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
மேலும், சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அளித்து உள்ளது. இந்நிலையில், மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில், கோவையில் இன்றைய கொரோனா பாதிப்பு 188 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே அதிகம் பாதித்துள்ள பதிவு ஆகும். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் 50 சதவிகிதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்கலாம். வாரச்சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்கள், அனைத்து வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விடுத்துள்ளார்.