கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் தடைகள் – கேரள அரசு உத்தரவு!

0
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் தடைகள் - கேரள அரசு உத்தரவு!
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் தடைகள் - கேரள அரசு உத்தரவு!
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் தடைகள் – கேரள அரசு உத்தரவு!

கேரளா மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் 10% க்கும் அதிகமாக உள்ளதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. பாதிப்புகள் குறைந்துள்ள பகுதிகளில் அதிக தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

கேரளா அரசு அறிவிப்பு:

கேரளா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 14,373 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,142 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 13,960 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 10, 751 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 28,77,557 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் பாதிப்பு விகிதம் 10.9% ஆக உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு இன்று முதல் தீவிர அணுகுமுறையை தொடங்கியுள்ளது.

WhatsApp ல் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் நோய் பரவல் விகிதத்தின் அடிப்படையில் மாநில அரசு பிரித்துள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மறுஆய்வு கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. அதன்படி, டிபிஆர் 5 க்குக் கீழே உள்ள பகுதிகள் ஏ பிரிவு என்றும், 5 முதல் 10 வரையிலான டிபிஆர் உள்ள பகுதிகள் பி பிரிவு என்றும், 10 முதல் 15 வரையிலான டிபிஆர் வகை சி பிரிவு என்றும், 15 க்கு மேல் டிபிஆர் உள்ள பகுதிகள் டி பிரிவு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் அடிப்படையில் ஏழு மாவட்டங்கள் 10% க்கும் அதிகமான நேர்மறை விகித்தை பெற்றிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 82 உள்ளூராட்சி மன்றங்கள் ஏ பிரிவில், பி பிரிவில் 415, சி பிரிவில் 362 மற்றும் டி பிரிவில் 175 பகுதிகளும் உள்ளது.

கட்டுப்பாடுகள்:

  • ஏ மற்றும் பி வகை பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்து ஊழியர்களுடனும், சி பிரிவில் உள்ளவர்கள் 50% ஊழியர்களுடனும் செயல்படலாம்.
  • ஏ மற்றும் பி பிரிவுகளில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை இரவு 9.30 மணி வரை வீட்டு விநியோக சேவைகள் வழங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது.
  • குளிர்சாதன வசதி இல்லாமல் உட்புற விளையாட்டுகள் மற்றும் ஜிம்களும் செயல்படலாம்.
  • மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி சுற்றுலாப் பகுதிகளில் தங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது.
  • இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், ஆர்டிபிசிஆர் சோதனையில் எதிர்மறை அறிக்கையும் வைத்திருப்பவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!