வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு கூடுதல் அம்சம் – விரிவான விளக்கம்!

1
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு கூடுதல் அம்சம் - விரிவான விளக்கம்!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு கூடுதல் அம்சம் - விரிவான விளக்கம்!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு கூடுதல் அம்சம் – விரிவான விளக்கம்!

WhatsApp நிறுவனம் தனது பயனர்களுக்கு சில சிறப்பு அம்சங்களை வழங்க உள்ளதாகவும், அவற்றை ஆண்ட்ராய்டு மற்றும் பீட்டா பதிப்பில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வகை அம்சங்கள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது.

புதிய அம்சம்

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் சிறந்த தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் செயலி புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்த போது பயனர்கள் இடையே பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் சில அசத்தலான அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் படி வியூ ஒன்ஸ் மற்றும் பல சாதனங்களில் வாட்ஸப் சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த செயலியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

12 இலக்க எண்கள் அனைத்தும் ஆதார் எண் அல்ல – UIDAI எச்சரிக்கை!

இந்த அம்சங்களை வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களும் இவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான சோதனை முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் Android மற்றும் iOS சாதனங்களின் சமீபத்திய பீட்டா பதிப்புகளில் காணப்பட்டது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் பயனர்கள், Android மற்றும் iOS சாதனங்களில் வரவிருக்கும் புதிய அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்திய பீட்டா பதிப்பில் URL களுக்கான சேவைகளை தொடங்கியது என WABetaInfo தெரிவிக்கிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ் அப்பின் பீட்டா பயனர்கள் இந்த அம்சத்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இவை தற்போது தான் வளர்ச்சி பெற்று வருவதாகவும், வரும் நாட்களில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் WABetaInfo இன் கூற்றுப்படி, வாட்ஸ்அப் செயலியில் URL க்கான விளக்கம் தெளிவாக இல்லை எனும் பட்சத்தில் அதற்கு பதிலாக ஒரு சிறிய படத்தை காண்பிக்கும்.

TN Job “FB  Group” Join Now

தற்போது வாட்ஸ் அப் செயலியில் எழுத்துரு வண்ணங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனர்களின் கோரிக்கையை ஏற்ற அந்நிறுவனம் எழுத்துருக்களை பச்சை நிறத்தில் இருந்து சாம்பல்-நீல நிறமாக மாற்றியுள்ளது. தவிர சமீபத்திய பீட்டா 2.21.14.8 பதிப்பில், பயனர்களுக்கான சேட் பாக்சின் இடையே தோன்றும் கோடுகளை வாட்ஸ்அப் அகற்றியுள்ளது. மேலும் இந்த கோடுகள் நீக்கப்பட்ட பின்பாக பயனர்கள் சிறிய அளவிலான புகைப்படங்களை காணலாம் என்று WABetaInfo தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!