தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கொரோனா தடுப்பூசி – ரூ.39.05 கோடி மதிப்பில் அரசு கொள்முதல்!!

0
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கொரோனா தடுப்பூசி - ரூ.39.05 கோடி மதிப்பில் அரசு கொள்முதல்!!
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கொரோனா தடுப்பூசி - ரூ.39.05 கோடி மதிப்பில் அரசு கொள்முதல்!!
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கொரோனா தடுப்பூசி – ரூ.39.05 கோடி மதிப்பில் அரசு கொள்முதல்!!

தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் தமிழக அரசு ரூ.39.05 கோடி மதிப்பில் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் முகாம்களில் கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலுமான தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு புதுப்பிப்பது எப்படி? கால அவகாசம் நீட்டிப்பு!

மேலும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்நிலையை போக்கும் வகையில் தமிழக அரசு தற்போது அதிக அளவில் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது. அதன்படி ரூ.39.05 கோடி மதிப்பில் தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்திற்கு கூடுதலாக 42.58 லட்ச தடுப்பூசிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி நாளை முதற்கட்டமாக 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் தமிழகத்திற்கு வரவுள்ளன. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என்று கூறிப்படுகிறது. மேலும் நாளை முதல் பொதுமக்கள் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் பெற்றுக்கொளளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!