தமிழகத்தில் “இனி இவர்களும்” பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0
தமிழகத்தில்
தமிழகத்தில் “இனி இவர்களும்” பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகத்தில் நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

பழங்குடியினர் பட்டியல்:

தமிழகத்தில் நரிக்குறவ மக்கள் இன்னும் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருக்கின்றனர். அந்த மக்களில் பலரது குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர். அவ்வாறு பள்ளிகளில் படிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பழங்குடியினர் பட்டியலில் சாதி சேர்க்கப்படாமல் நாடோடி பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இருப்பதால் பல சலுகைகள் கிடைக்காமல் போகிறது. அதனால் நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த 19-3-2022 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 -ம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967-ம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் என முதல்வர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இனி 100% WFH தான், மத்திய அரசின் பரிசீலனை – அமைச்சர் அளித்த விளக்கம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் இனி பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர்- குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!