ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – பெயர் சேர்த்தல் & நீக்குதல்! எளிய வழிமுறைகள்!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - பெயர் சேர்த்தல் & நீக்குதல்! எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - பெயர் சேர்த்தல் & நீக்குதல்! எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – பெயர் சேர்த்தல் & நீக்குதல்! எளிய வழிமுறைகள்!

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். அதன் அடிப்படையில் எளிமையான முறையில் எப்படி ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் பெயர் நீக்குதல் அல்லது சேர்த்தல் என்பதை பார்க்கலாம்.

எளிமையான வழிமுறைகள்:

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை கருதப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை மலிவான விலையில் பெற முடியும். இதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் பெயரை நீக்குவது அல்லது சேர்த்தல் எளிமையாக ஆன்லைன் முறை மூலம் செய்யலாம்.

1. ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு பயனாளர் நுழைவு என்பதை ‘க்ளிக்’ செய்யவும்.

2.பிறகு ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது மொபைலுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை உள்ளீடு செய்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.

4. பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் ’அட்டை பிறழ்வுகள்’ என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு `புதிய கோரிக்கை’ என்பதை க்ளிக் செய்யவும்.

5.குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், ’சேவையை தேர்வு செய்யவும்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

6.இப்போது சேவை தேர்வுகளில் ’குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும் மற்றும் காரணத்தைக் குறிப்பிடவும்.

IND vs SA : இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் – ரசிகர்கள் விமர்சனம்!

7. திருமணம், இறப்பு போன்ற எந்த காரணத்திற்காக குடும்ப உறுப்பினரின் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான ‘ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்’ என்பதை க்ளிக் செய்யவும்.

8. பின்னர், ‘உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து, ‘பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.

9. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். பெயர் நீக்கம் செய்யப்பட்டதை அதிகாரபூர்வ இணையதளம் பக்கத்துக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!