நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? கார் விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு!

0
நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? கார் விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு!
நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? கார் விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு!
நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? கார் விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கு!

சென்னை மாமல்லபுரம் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கிய வழக்கில் நடிகை யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த்:

கடந்த 24 ஆம் அன்று நடிகை யாஷிகா ஆனந்த், அவருடைய தோழி மற்றும் 2 நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, அதிவேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதியதில் அதில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் சிக்கிய மற்ற மூவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி ரூ.3,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் கீழ் காரை வேகமாக ஓட்டி வந்த நடிகை யாஷிகா மீது அதிவேகமாக காரை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், மரணத்தை விளைவிக்கும் குற்றம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும்? அமைச்சர் விளக்கம்!

மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த உரிமத்தை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நடிகை யாஷிகா மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அவர் 3 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டால், அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!