“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்கு கோலாகலமாக நடந்த திருமணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யாவிற்கு கோலாகலமாக நடந்த திருமணம் - அவரே வெளியிட்ட வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்கு கோலாகலமாக நடந்த திருமணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி மற்றும் மகராசி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலி தனிகா தன்னுடைய திருமணத்தன்று எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை வைஷாலி:

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா. அவர் விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னதாக கண்ணனின் காதலி ஐஸ்வர்யாவாக நடித்தவர். தற்போது கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா நடித்து வருகிறார். வைஷாலி தனிகா இதுவரை நடித்த சீரியல்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் பிரஜின், சரண்யா துராடி நடிப்பில் புது சீரியல் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது காதலர் சத்யதேவ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தனது பிறந்தநாள் அன்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் இதுதான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என்று கூறி விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை தெரிவித்தார். அந்த பதிவில் அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வில்லி என்ட்ரி? ரசிகர்கள் கொண்டாட்டம்!

திருமண கோலத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார். தற்போது திருமணத்தன்று எடுத்த வீடியோ ஒன்றை ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். அதில் என்னுடைய முக்கியமான நாள், இந்த வீடியோவை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை என அதில் பதிவிட்டுள்ளார். இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here