விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சுஜிதா – சொந்த ஊர் விசிட்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சுஜிதா - சொந்த ஊர் விசிட்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சுஜிதா - சொந்த ஊர் விசிட்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சுஜிதா – சொந்த ஊர் விசிட்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா தற்போது சீரியலில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்திருக்கும் நிலையில், அவரது குலதெய்வ கோவில், பூர்வீக வீடு என அனைத்தையும் ஒரு விசிட் செய்து அவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

நடிகை சுஜிதா

மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற முக்கிய சீரியலில் தனம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இந்த சீரியல் துவங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகாலம் கடந்திருக்கும் நிலையில் இத்தொடரில் தனம் அண்ணியாக வலம் வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்றதொரு கூட்டு குடும்பத்தில் மூத்த மருமகளாக வரும் தனம் இதுவரை அந்த குடும்பத்தை உடைய விடாமல் கட்டி காப்பாற்றி வருகிறார்.

2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை – 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!

இந்த கூட்டுக் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தாலும் அவை எல்லாவற்றையும் சரி செய்து, குடும்பத்துக்காக வாழும் தனம் என்ற கனமான கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து, இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பவர்களில் நடிகை சுஜிதாவும் ஒருவர். இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் இந்த சீரியலில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

அந்த வகையில் சீரியல் ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது கணவரின் சொந்த ஊரான கோயமுத்தூருக்கு சென்றிருக்கும் நடிகை சுஜிதா மற்றும் அவரது குடும்பம், அங்குள்ள குலதெய்வ கோவில், 150 ஆண்டுகளாக பழமை மாறாமல் இருக்கும் வீடு, சொந்த ஊர், பள்ளிக்கூடம் என அனைத்தையும் பார்வையிட்டு அதனை தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் நடிகை சுஜிதா. இவரது இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!