விஜய் டிவி புதிய சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி புதிய சீரியலில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி புதிய சீரியலில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி புதிய சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய கையோடு, தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிகையின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஷீலாவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷீலா

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரபல நடிகை ஷீலா. சிறிய வயது துவங்கி சின்னத்திரை தொடர்களில் ஒரு முக்கிய பங்கு வகித்து வரும் ஷீலாவுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. ஒரு கை முடமானவாறு, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் முழுவதையும் தற்போது முடித்திருக்கிறார் ஷீலா.

TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ‘பாரதி கண்ணம்மா’ எந்த இடம் தெரியுமா?

மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றிருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடந்த சில மாதங்களாக சறுக்கல் காணப்பட்டு வந்தது. அதனால் இழந்த TRP ரேட்டிங்கை மீட்டெடுக்கும் பொருட்டு, ஷீலாவின் லட்சுமி அம்மா என்ற கதாப்பாத்திரம் இறந்து போனதாக காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீண்டுமாக புத்துயிர் பெற்றுள்ளது. இதில் இறந்து போனவர்களுக்கு செய்யும் இறுதிச் சடங்கு காட்சிகள் நிஜத்தில் எடுக்கப்பட்டது போல படமாக்கப்பட்டிருந்தது.

பாஸ்கரை சந்திக்கும் பார்வதி, திருமணம் நடக்காது என மிரட்டும் விக்கி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

கிட்டத்தட்ட 5 நாட்களாக எடுக்கப்பட்ட இந்த படப்பிடிப்பு காட்சிகளில் மிகவும் துணிச்சலோடும், அர்ப்பணிப்போடும் நடித்திருந்தார் நடிகை ஷீலா. இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு பாதியிலேயே விலகுவது குறித்து வருத்தம் தெரிவித்திருந்த அவர், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு புதிய சீரியலில் நடிகை சரண்யா துராடியின் அம்மாவாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த தகவலை ஒரு யூடியூப் சேனலில் சந்தோசமாக பகிர்ந்து கொண்ட அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!