தன்னுடைய கணவர் ஆர்யனுக்காக ரம்ஜான் பிரியாணி செய்த நடிகை ஷபானா – வைரலாகும் வீடியோ!

0
தன்னுடைய கணவர் ஆர்யனுக்காக ரம்ஜான் பிரியாணி செய்த நடிகை ஷபானா - வைரலாகும் வீடியோ!
தன்னுடைய கணவர் ஆர்யனுக்காக ரம்ஜான் பிரியாணி செய்த நடிகை ஷபானா - வைரலாகும் வீடியோ!
தன்னுடைய கணவர் ஆர்யனுக்காக ரம்ஜான் பிரியாணி செய்த நடிகை ஷபானா – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடியாக இருந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வலம் வருபவர்கள் ஆர்யன் ஷபானா ஜோடி. இந்நிலையில் நேற்று ரம்ஜான் தினத்தையொட்டி ஷபானா ஆர்யனுக்கு ஆசையாக பிரியாணி செய்து கொடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்யன் ஷபானா ஜோடி:

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷபானா. இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு முதலில் நடிக்க வீட்டில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பின் தன்னுடைய திறமையால் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று அவர் பெருமைப்படுத்தினார். இந்நிலையில் ஷபானா விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கேரளா முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடந்தது.

Exams Daily Mobile App Download

இருவரும் பிரிய போகிறார்கள் என பல வதந்திகளுக்கு மத்தியில் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அந்த ஜோடி தங்களது காதலை பல பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரம்ஜான் தினம் என்பதால் ஷபானா தன்னுடைய காதல் கணவருக்கு பிரியாணி செய்து கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஷபானா ஆசையாக பிரியாணியை செய்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் ஆர்யன் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அதனால் அவரை சீக்கிரம் சின்னத்திரையில் பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வீடியோவில் அது குறித்த கமெண்ட்கள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வேறு வேறு மாதத்தில் திருமணம் செய்து கொண்டு மதம் மாறாமல் பல பிரபலங்கள் இருந்து வரும் நிலையில் அந்த வரிசையில் இந்த ஜோடியும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!